Yasmin Ahmad

Yasmin Ahmad

Yasmin Ahmad, கடந்த ஜுலை 25, 2009ஆம் ஆண்டு தனது 51ஆவது வயதில் காலமானார்.

Yasmin அனைத்துலகத் தரம் வாய்ந்த திரைப்பட இயக்குனர். இவரின் தொலைக்காட்சி விளம்பரத் தகவல்கள் அனைத்தும் உலகளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. சான் பிரான்சிஸ்கோ, பெர்லீன், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் புசான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களில் இவரின் கைவண்ணத்தில் உருவாகிய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையீடும் கண்டுள்ளன. 2006ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் இவரைக் கெளரவித்து, இவரின் படங்கள் சிறப்புத் தொகுப்பாகத் திரையிடப்பட்டன. 2004ஆம் ஆண்டு திரைக்கண்ட இவரின் ‘செபிட்’ திரைப்படம் மலேசியாவில் ஒரு புகழ்பெற்ற காவியமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத காதல் சிந்தனையைக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவரின் திரைக்கதைகள் இனம் மற்றும் மதத்திற்கும் அப்பால்பட்ட மற்றும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டவை. Yasmin Ahmad தயாரித்த திரைக்கதைகள் எதிர்மறையான சிந்தனையையும் தூண்டுதலையையும் ஏற்படுத்தக்கூடிய கதைகளாக இருந்தாலும் கதை அம்சம் மிக அழகாகவும் இயல்பாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இவரின் மரணம் மலேசியா கலை உலகம் ஒரு தலைச்சிறந்த சிந்தனையாளரை இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். மலேசியத் திரைப்பட உலகில் Yasmin எல்லாத் தலைமுறையிலும் ஒரு முக்கிய இடத்தை வகித்து வந்துள்ளார். மில்லியன் கணக்கான மலேசியர்களுக்கு இவரின் இறப்பு பெறும் இழப்பைத் தந்துள்ளது.

‘சாக்லட்’ இவரின் இறுதி படமாகும்.

மேற்கொண்டு

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!