பட்டியல் தயாரிப்பாளர்

Suleiman Brothers

Suleiman Brothers

Jordan மற்றும் Mussadique Suleiman சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான கூட்டணி ஆவர். இவர்கள், கைகளால் வரையப்படும் அனிமேஷன், 3டி மற்றும் 2டி இயல்பான கிராபிக், வீடியோ பதிப்பு, புகைப்பட நிபுணத்துவம் ஆகியவற்றில் கைத்தேர்ந்தவர்கள். Mussadique தனது சுய முயற்சியால் அறிவியல் மற்றும் கணினி செயழி வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். Jordan, அனிமேஷன் மற்றும் கணினி வடிவமைப்பில் ஆற்றல் பெற்றவர். ‘ஸ்துடியோ வோக்செல்’ எனும் இவர்களின் படத்தயாரிப்பு நிறுவனத்தில் நிறைய கலைத்தொடர்பான விளம்பரம் மற்றும் கூட்டணி செயல்திட்டங்களைச் செய்து வந்துள்ளனர். அவற்றுள் Pete Teo கலைஞருக்காகத் தயாரித்த ‘ஆம்ஸ் ஒவ் மரியேன்’, ‘லோஸ்ட் இன் அமெரிக்கா’ ஆகிய வீடியோ இசை, எ.ஐ.எம். விருதைப் பெற்றது. Jordan மற்றும் Mussadique Suleiman சகோதரர்கள் சரளமான மின் செயல்திட்டங்களைச் செய்யக்கூடியவர்கள். மேலும், இவர்கள் குறிப்புகள் மற்றும் செமியோடிக், கற்பனைவளம், புதிய செயழி தயாரிப்பு ஆகிய துறைகளில் தேர்ந்தவர்கள். இவர்களுடைய கணினி நிபுணத்துவத்தால் குறைந்த வரவுசெலவில் படத்தைத் தயாரித்து விடுகின்றனர். தற்பொழுது இவர்கள் இருவரும் அனிமேஷன் படம் ஒன்றைத் தயாரித்து வருகின்றனர்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Nam Ron

Nam Ron

Nam Ron பெர்லீஸ் மாநிலத்தில் பிறந்தவர். இவர் தனது பட்டப்படிப்பினை தேசியக் கலைக் கல்லூரியில் முடித்தவர். இவர், Yasmin Ahmad, Dain Said, Adman Salleh, James Lee, Tan Chui Mui, Woo Ming Jin மற்றும் Amir Muhammad ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மலேசியாவில் ஒரு தலைச்சிறந்த நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். சிறந்த நடிகரான இவர், நிறைய திறமைகளையும் உணர்ச்சிப்பூர்வமான பட இயக்குனரும் ஆவார். இவர் தற்பொழுது, நிறைய குறும்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ‘காடோ’ எனும் முழுநீள மின்னியல் படத்தையும் தனித்து நின்று தயாரித்துள்ளார். நாம் ரோன் தனது எல்லாப் படைப்புகளிலும் சமுதாய சிந்தனையை அழகாக வெளிகொணர்வதே அவரின் தனிச் சிறப்பாகும். அவர் இப்பொழுது நாட்டின் தலைச்சிறந்த இயக்குனர்களின் விளம்பரம் மற்றும் சுயமாகத் தயாரிக்கும் படங்களில் நடித்தும் வருகிறார். 2010ஆம் ஆண்டு தனது இரண்டாவது முழுநீள படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Khairil Bahar

Khairil Bahar

Khairil Bahar ரிம.10,000க்கு உட்பட்ட செலவில் ‘சிப்லாக்’ என்ற தனது முதல் முழுநீள படத்தை உருவாக்குவதற்கு முன் சிறிய பட்ஜெட்டில் நிறைய படங்களைத் தயாரித்த அனுபவம் உடையவர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை ‘கோல்டன் ஸ்கீரின்’ சினிமா நிறுவனம் வெளியீடு செய்து நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும், இப்படம் அனுகரா ஸ்கீரின் 2006ஆம் ஆண்டின் சிறந்த மாறுபட்ட சித்திரம் என்ற விருதையும் பெற்றது. இவர், நிறைய தொலைக்காட்சி தொடர்களைத் தயாரித்துள்ளார். அவற்றுள் ‘அம்பாங் மெடிகல்’, ‘கோஸ்ட்’, ‘டாக் சிட்டி’ குறிப்பிடத்தக்கவை. Khairil Bahar, வை2கே, வான் பக் சொட், டிரெகன் ரெட், அஸிஸி மற்றும் சொவ் டச் ஆகிய தனித்து இயங்கும் இசைக் குழுக்களுக்கு நிறைய வீடியோ இசைகளை உருவாக்கியுள்ளார். தற்பொழுது Khairil Bahar தனது இரண்டாவது படமான ‘லண்டன் காலிங்’ எனும் படத்திற்கு இறுதி கட்ட வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் Justin Chan, Chermaine Poo, Melissa Maureen Rizal மற்றும் இவரும் நடித்துள்ளனர். திரைக்கதைகள் எழுதாத நேரத்திலும், படங்கள் இயக்காத நேரத்திலும், பட தயாரிப்பு மற்றும் நடிப்புத் துறையில் நடித்தல், ஸ்தான் செய்தல், இதழ்களுக்கு எழுதுதல், தனது ராக் இசைக்குழுவிற்கு கித்தார் வாசித்தல் போன்ற வேலைகளையும் செய்து
வருகிறார்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Johan John

Johan John

இயக்குனராகப் பணியாற்றுவதற்கு முன்பாக Johan John தனது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு ஒலிபதிவாளராகவும் கேளிக்கை விடுதிகளிலும் பணி புரிந்து வந்துள்ளார். மலேசியத் திரைப்பட நிறுவனத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, 2006ஆம் ஆண்டு படத்தை இயக்க தொடங்கி விட்டார். அதே சமயத்தில், ஒலிபதிவு மற்றும் பதிப்பு வேலைகளைச் செய்து வந்தார். இவர் தயாரித்த ‘தஜோக் செரித்தா’ எனும் குறும்படம் 2006ஆம் ஆண்டில் சிறந்த மாறுபட்ட திரைக்கதைக்கான விருதைத் தட்டிச் சென்றது. Johan John படைப்புகள் அனைத்தும் அந்தரங்கம் மற்றும் உணர்ச்சி பூர்வமான படைப்புகளாக இருக்கும். இவர், தொலைக்காட்சி, 8தீவி மற்றும் ஆஸ்ட்ரோவில் துப்பறிவு தொடர்களையும் இயக்கியுள்ளார். Johan John எழுதி இயக்கிய முதல் படமான ‘சாஹாயா’ முடிவடையும் தருவாயில் உள்ளது.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Benji & Bahir

Benji Lim & Bahir Yeusuff

Benji Lim & Bahir Yeusuff ஆகிய இரு இளைஞர்களும் ஆரம்ப காலக்கட்டத்தில் சேர்ந்தே படங்களை இயக்கி, தயாரித்து வந்தனர். அதன் பிறகு இருவரும், ‘பெர்சர்த்துவான் பிக்சர்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை Arivind Abraham உடன் சேர்ந்து, 2004ஆம் ஆண்டு தொடங்கினர். இவர்கள் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் முழுநீள படங்களையும் தயாரித்துள்ளனர். அதில், ‘எஸ் காலி’ எனும் படம் திறனாய்வுகளில் நல்ல மதிப்பைப் பெற்று 2006ஆம் ஆண்டு காத்தே திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. இவர்கள் ‘5.13’ மற்றும் ‘த ஜோஸ்வா தேப்ஸ்’ எனும் படங்களைத் தயாரித்து 2010ஆம் ஆண்டில் வெளியீடு செய்யவுள்ளனர். Bahir கல்லூரியில் பயிலும் போதே படங்களை இயக்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து, இப்பொழுது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். Benji, தௌசன் மேரிலேன் பல்கலைக்கழகத்தில் மின்னியல் தகவல் ஊடகத்தில் பட்டப்படிப்பை முடித்தவுடன் நிறைய படங்களை எழுதி இயக்கியுள்ளார். அதில், ‘சோக்’ என்ற பட தொகுப்பு தௌசன் தகவல் ஊடக விழாவில் தகுதி பெற்றது. மேலும், டைகர் பீர் விளம்பரத்தை இணையத்தின்வழி சிறப்பாகச் செய்து முடித்தார். Benji Lim & Bahir Yeusuff ஆகிய இருவரும் இடைநிலைப்பள்ளி பருவத்திலிருந்து நண்பர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

James Lee

James Lee

James Lee டிஜித்தல் முறையில் படம் தயாரிப்பதில் முதன்மை பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளில் தலா 35 படங்களை இயக்கி அப்படங்களில் நடன இயக்குனராகவும் செயல்பட்டுள்ளார். மலேசியாவின் திரைப்படத் துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளி என்றால் மிகையாகாது. இவர் இயக்கிய பல டிஜித்தல் படங்கள் பல முறை தென்கிழக்காசிய வட்டாரங்களில் திரைக்கண்டுள்ளன. பாங்கோக்கில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் இவரின் புகழ்பெற்ற திரைப்படமான ‘மை பியுட்டிபுல் வாசிங் மிசீன்’ முறையே ஆசியாவில் சிறந்த பட விருதையும் பிப்பிரக்ஸ்சி விருதையும் பெற்றது. 2009ஆம் ஆண்டு இவரின் வியாபார ரீதியிலான ‘ஸ்திரியா’ எனும் படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனையைப் படைத்தது. 2009ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில், இவரின் அண்மைய வெளியீடான டிஜித்தல் வடிவிலான ‘கோல் ப் யு நீட் மீ’ எனும் படம் வெள்ளி பரிசுக்கான இடத்தைப் பெற்றது. அவரின் ஓய்வு நேரங்களில், தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வந்துள்ளார். தற்பொழுது ஆக்க்ஷன் படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார். இப்படம் 2010ஆம் ஆண்டு திரைக்காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Woo Ming Jin

Woo Ming Jin

Woo Ming Jin, சான் டியாகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் முழு கடனுதவியை இலவசமாகப் பெற்று பயின்ற மாணவர் ஆவார். 1999ஆம் ஆண்டு மலேசியாவிற்குத் திரும்பிய Woo Ming Jin, நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள், குறும்படங்கள், திரைப்படம் ஆகியவற்றை தயாரித்துள்ளார். 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற சான் பிரான்சிஸ்கோ அனைத்துலகத் திரைப்பட விழாவில், Woo Ming Jin தயாரித்த ‘மண்டே மார்னீங் குளோரி’ எனும் படம் திரையிடப்பட்டது. மேலும், அதே வருடத்தில், புசான், தோக்கியோ, பெர்லீன், லொகார்னோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு ‘த எலிப்பன் என் த சீ’ எனும் தனது இரண்டாவது படத்தை வெளியிட்ட வேளையில் ‘வராட்டி’ இதழில் இவர், கிழக்காசியாவின் புதிய குரல் என்றும் சிறந்த சிந்தனையாளர் என்றும் வர்ணிக்கப்பட்டார். இவர் தயாரித்த படங்கள் அனைத்தும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. மேலும், 30க்கும் மேற்பட்ட அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் இப்படங்கள் திரைக்கண்டுள்ளன. தற்பொழுது Woo Ming Jin தனது மூன்றாவது வெளியீடான ‘வூமன் ஒன் பயர் லுக்ஸ் போ வாட்டர்’ எனும் படத்தைத் தயாரித்து வருகிறார்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Tan Chui Mui

Tan Chui Mui

Tan Chui Mui 2002ஆம் ஆண்டில் பல்லூடகப் பல்கலைக்கழகத்தில் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறையில் பல்லூடகப் பட்டத்தைப் பெற்றார். அன்று முதல் இன்று வரை அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் அனைவராலும் இவர் கண்காணிக்கப்பட்டவர். இவர் தயாரித்த குறும்படங்கள் ஐரோப்பிய திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பரிசுகளைப் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, முழுநீளத் திரைப்படமான ‘லாவ்ஸ் கோங்கஸ் ஆல்’ ராட்டர்டான் மற்றும் புசானில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்படவிழாவில், புதிய சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. இவர் தனது சொந்த படங்களை இயக்குவதோடு James Lee, Amir Muhammad and Liew Seng Tat ஆகிய தயாரிப்பாளர்களின் படங்களையும் இயக்கியுள்ளார். Tan Chui Mui கைவண்ணத்தில் உருவாகிய படைப்புகள் பெரும்பாலும் மண்வாசனை மற்றும் தான் வாழ்ந்த கிராமச் சூழ்நிலையை மையமாகக் கொண்டிருக்கும். தற்பொழுது இவர், தனது இரண்டாவது படமான ‘த இயர் வித்தாவுட் அ சம்மர்’ எனும் மாலாய் படத்தை பஹாங் மாநிலத்தில் படமாக்கி வருகிறார்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Kamal Sabran

Kamal Sabran

Kamal Sabran ஒரு கலைஞர், வடிவமைப்பாளர், ஆராய்ச்சியாளர் ஆவார். இவரின் படைப்புகளில் கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வேலைபாடுகள் கலந்திருக்கும். Kamal Sabran கைவண்ணத்தில் உருவாகிய ஓவியங்கள், கலை பதிப்புகள், குறும்படங்கள் மற்றும் ஒலி கலைகள் அனைத்தும் சிங்கபூரிலும் இந்தோனேசியாவிலும் நடைபெற்ற கலைவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. Kamal Sabran எப்பொழுதும், புதிய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, சிறந்த கலைஞர்கள், புகைப்பட நிருபர்கள், வடிவமைப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோர் கூட்டணியில் சிறந்த படைப்புகளைத் தந்து வந்துள்ளார். இவர் தனது படைப்புகளில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் இடத்தையும் நேரத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்தி வேலைகளைச் செவ்வன முடிப்பதால் மலேசியத் தேசிய கலைக்கூடம் இவருக்குச் சிறந்த புதிய ஊடகக் கலைஞர் விருதை 2004ஆம் ஆண்டு வழங்கியது. தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு, ஆசியாவின் சிறந்த புதிய ஊடகக் கலைஞர் விருது இந்தோனேசியா தேசியக் கலைக்ககூடத்தில் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், 2005ஆம் ஆண்டு மலேசியத் தேசிய வின்னுலக நிறுவனத்தின் ஆஸ்தான கலைஞராக இவர் நியமிக்கப்பட்டார். ஊடகக் கலைத்துறையைத் தவிர்த்து, விருதுகளைப் பெற்ற படைப்புகளுக்கும் Kamal Sabran இசை வீடியோகளைத் தயாரித்து தந்துள்ளார். அவற்றுள் Pete Teo மற்றும் Alleycats கலைஞர்களின் படைப்புகளும் அடங்கும். தற்பொழுது, Kamal Sabran ஈப்போவில் வசிக்கிறார்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Desmond Ng

Desmond Ng

Desmond Ng 1998ஆம் ஆண்டு நியூக்கில் தனது திரைப்படத் தயாரிப்புத்துறை படிப்பைத் தொடர்வதற்கு முன்பு 1995ஆம் ஆண்டு பெல்பன் பல்கலைக்கழகத்தில் நிதிதுறை மற்றும் திரைப்படத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கோலாலம்பூருக்கு வருகை தந்திருந்த போது, விளம்பரத்துறையில் தம்மை ஈடுப்படுத்திக் கொண்டு, ஒரு தலைச்சிறந்த தொலைக்காட்சி விளம்பர இயக்குனராகப் பணியாற்றி, 7 வருட காலக்கட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களைத் தயாரித்துள்ளார். மக்சிஸ், டிஜி, செல்கோம், சோனி, கோக், குடாங் காராம் மற்றும் பிலிப் மோரிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இவர் தயாரித்த விளம்பரங்கள் பல விருதுகளைப் பெற்றுத்தந்துள்ளன. அவற்றுள் ‘சிறந்த விளம்பரம்’, சிறந்த இயக்குனர்’, ‘கன்சில் விருது’ (மலேசியா), ‘அடோய் விருது’ (இந்தோனேசியா), ‘சித்ராபவிவாரா விருது’ (இந்தோனேசியா) ஆகிய விருதுகள் குறிப்பிடத்தக்கது. இவர் கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தாவில் பல படைப்புகளைத் தந்துள்ளார். ஓய்வு நேரங்களில் Desmond Ng குறும்படங்களையும் தயாரித்துள்ளார். இவரின் படைப்புகள் சிங்கபூரிலும் ஜகார்த்தாவிலும் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டது. தற்பொழுது இவர், முழுநீள படத்தை எழுதி வருகிறார்.

மேற்கொண்டு

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!



Creative Commons License

Sponsored by P1

Cupid Blogger