தயாரிப்பாளரின்

Pete Teo

செயல்திட்டத் தயாரிப்பாளர்

Pete Teo

Pete Teo மலேசியாவில் பல விருதுகளைப் பெற்ற பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவரின் படைப்புகள் பிபிசி உலகத் தகவல் ஊடகம், அமெரிக்க தேசியப் பொது வானொலி, கனடாவின் ஒலிப்பரப்பு நிலையம், கே.பி.எஸ். (தென் கொரியா), என்.எச்.கே. (ஜப்பான்) ஆகிய ஊடகங்களில் ஒலிப்பரப்பாகியுள்ளது. பீத், சினிமாவின் புதிய மலேசிய அலைகள் வரிசையில் அனைத்துலகத்தில் பிரபலமாகிய ஒரு நடிகரும் ஆவார். மேலும், இவரின் படைப்புகள் அனைத்தும் வெனிஸ், கேன்ஸ், தொக்கியோ, ராட்டர்டாம், புசான், மரகேஸ், துரோந்தோ, ஹாங்காங், நேன்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் பல சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. 2008ஆம் ஆண்டு, இவர் இனவாத ஒழிப்பை மையமாகக் கொண்டு தயாரித்த இசை தொகுப்பு ‘மலேசிய கலைஞர்கள் ஒற்றுமை ஒருங்கிணைப்பபு’ எனும் தலைப்பில் உருவாகி நாடு தழுவிய அளவில் பெறும் வரவேற்பைப் பெற்றது. எவ்வித வரவுசெலவும் இல்லாமல் 52 கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகிய இப்படைப்பு 10 மில்லியன் மலேசியர்கள் பார்த்தும் கேட்டும் இரசித்துள்ளனர். வேலையைத் தனது உயிராகக் கருதும் இவர், இரண்டுபடங்களுக்குப் பின்னணி இசை அமைத்துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட இசை குறுந்தட்டு வியாபார ரீதியில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுத் தந்தது. பல திறமைகளையுடைய Pete Teo இரண்டு படங்களில் நடித்துள்ளார். தனது சுய உழைப்பில் இசை மறுபதிப்பு நிலையத்தை நிறுவி, 2009ஆம் ஆண்டில் ஆறே மாதத்தில் 15 இசைத் தொடர்பான செயல் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி முடித்தார். தற்பொழுது அவர், புதிய படைப்பிற்கான பாடல்களைப் புனைக்கிறார்.

Packet One Networks

செயல்திட்ட நிர்வாகி

Packet One Networks (P1) எனும் நிறுவனம் மலேசியாவின் விமேக்ஸ் (WiMAX) தொலைத்தொடர்பு தகவல் ஊடகத்தில் முதல் நிலையில் உள்ளது. இது தென்கிழக்காசியாவில் விமேக்ஸ் (WiMAX) தொலைத்தொடர்பு தகவல் ஊடகத்தின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. மேலும், வியாபார ரீதியிலான முதல் 802.16e 2.3GHz தொலைத்தொடர்பு அளவினை கொண்டு தென் கொரியாவிற்கும் அப்பால்பட்டு விளங்கிகிறது. 2008ஆம் ஆண்டு ஆசியாவின் ரேட் ஹியரிங் விருது விழாவில் இந்நிறுவனம் ‘வளர்ச்சியடைந்த ஆக்கப்பூர்வத் திறன் மிகுந்த தனியார் நிறுவனம்’ எனும் விருதைப் பெற்றுள்ளது.

மலேசியாவில், ஒலி தொடர்பில் புதிய ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என பி1 நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு, ’15 Malaysia’ முழு ஆதரவில், கடமையுணர்வுள்ள பொதுநல நடவடிக்கையின் அடிப்படையில் ‘P1 Filmmakers Showcase’ எனும் நிகழ்ச்சியைப் பெருமையுடன் வழங்கியது. பி1 நிறுவனம் முயற்சியில் முதல் முறையாகக் கலை மற்றும் கலை தொடர்ப்பில் கையாளப்பட்ட அனைத்துப் படைப்புகளுக்கும் ஆதரவு நல்கியுள்ளது.

பி1 நிறுவனத்தின் துணை நிறுவனமான RUUMZ, ’15 Malaysia’வின் கூட்டு நிறுவனமாகும். RUUMZ நிறுவனம் தனக்குச் சொந்தமான இணையத்தளப் பொதுநலத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இதில் பதிவு செய்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்ப்பு கொள்ளவும், இசையைச் செவிமடுக்கவும், படங்களைப் பார்க்கவும், கணினி விளையாட்டை விளையாடவும், மின்அஞ்சல் வழி தொடர்பு கொள்ளவும், மற்றும் தொலைத்தொடர்பு சமுதாயத்தில் இணையவும் முடியும். உடனே பதிவு செய்யுங்கள்!



Creative Commons License

Sponsored by P1

Cupid Blogger