கேள்வி பதில்

 1. 15malaysia என்றால் என்ன?

  15malaysia என்பது குறும்படம் தயாரிக்கும் செயல்திட்டமாகும். இச்செயல்திட்டத்தில் 15 மலேசியப் பட இயக்குனர்களால் இயக்கப்பட்ட 15 குறும்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குறும்படமும் 3 முதல் 7 நிமிட வரையில் இடம்பெறும்.

 2. படத்தின் கருப்பொருள் என்ன?

  நாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களும் அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனையை மையமாகக் கொண்டிருக்கும். இவற்றுள் கையூட்டுப் பிரச்சனைகள், இன ஒற்றுமை, பொருளாதார நெருக்கடி, இஸ்லாமிய வங்கி, சமுதாய எதிர்பார்ப்பு, நன்னெறி மற்றும் ஒழுக்கம், சுகாதாரம், அரசாங்கத்தின் சுகாதார விழிப்புணர்வு போன்றவை அடங்கும். அவற்றுள் சில படத் தொகுப்புகள் நகைச்சுவையாகவும் மற்றும் சில படத் தொகுப்புகள் கருத்தாழம் கொண்ட படங்களாகவும் இருக்கும். இவை அனைத்தும் மலேசியாவை மையமாகக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவரவர் தேர்ந்தெடுக்கும் தலைப்புக்கும் கருப்பொருளுக்கும் பொறுப்பாளியாவர்.

 3. இப்படங்களின் நடிகர்கள் யார்?

  இப்படங்களில் பல தரப்பட்ட நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், கைரீ ஜாமலுடின், நின் அஜிஸ், லியோ தியோங் லாய், தியான் சுவா, மற்றும் சைட் இப்ராஹிம் போன்ற அரசியல் தலைவர்கள் ஆகியோரும் நடித்துள்ளனர். திறமைகள், ஆர்வம் மற்றும் ஏற்புடைய கதாப்பாத்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு நாயும் எங்கள் படத்தில் நடித்துள்ளது. இல்லை, நாங்கள் பாரிஸ் ஹில்டனைக் குறிப்பிடவில்லை…

 4. படத் தயாரிப்பாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

  தயாரிப்பாளர்களின் திறமைகளை மையமாகக் கொண்டே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் சிலர் நாட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள், மற்றும் சிலர் நாடறியாத திறமைசாலிகள். இவர்களில் பலர் மலேசியாவில் பல வெற்றிகளைப் பெற்று, அண்மையில் நடைபெற்ற பல உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பெற்றுள்ளனர். சிலர் மலேசியாவின் புகழ்பெற்ற இயக்குனர்கள் வரிசையில் அடையாளம் காணப்படாமலிருந்தாலும், நாட்டின் தலைச் சிறந்த இயங்குனர்கள் என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் சுயசரிதையும் படங்களும் இந்த இணையத்தளத்தில் காணலாம்.

 5. ஏன் அரசியல்வாதிகள்?

  பொதுவாக நாங்கள் தயாரித்த குறும்படங்கள் யாவும் மலேசியாவை ஒட்டி இருப்பதால், சில படக் காட்சிகளில் இந்நாட்டின் அரசியல்வாதிகள் நடித்தால் இன்னும் ஏற்புடையதாக இருக்கும் என்று கருதியே இவர்களை நடிக்க வைத்துள்ளோம். முதலில், சாதரணமாகத் தோன்றிய இக்கருத்து, பிறகு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் பங்கெடுப்பும் கதாப்பாத்திரத்துடன் ஒன்றிணைந்த நடிப்பும் எங்களையே பிரமிக்க வைத்துவிட்டது. இவர்கள் அனைவரும், தாங்கள் அரசியல்வாதிகள் என்றோ, கட்சி அடிப்படையிலோ எவ்வித வேறுபாடு மற்றும் குறைகளையோ பாராமல் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர். எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி படத்தில் நடித்த அனைவரையும் நினைவில் கொள்வோம்.

 6. இது அரசியல் தொடர்பான செயல்திட்டமா?

  இப்படங்கள்யாவும் மலேசியர்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டிருப்பதால், ஆக்கப்பூர்வமான உணர்ச்சி வெளிபாட்டின் தொகுப்பாக உருவாகிய கருப்பொருளில் மலேசிய அரசியல் கலந்திருந்தாலும், 15Malaysia ஓர் அரசியல் சார்பற்ற படைப்பாகும். இப்படைப்புகளில். உருவான சூழல்கள் யாவும், மலேசியர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருந்தாலும், அவர்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணமாக இருக்கும். இவற்றில் குறுகிய மனப்போக்கை எதிர்க்க, சட்டப்பூர்வமான பேச்சு உரிமையை மலேசிய மக்கள் கொண்டுள்ளனர் என்பதும் அடங்கும்.

 7. இச்செயல்திட்டத்திற்குப் பொறுப்பாளர் யார்?

  Pete Teo தலைமையில் ஒரு சிறு குழுவால், ’15 Malaysia’ உருவாக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு, Malaysian Artistes For Unity எனும் செயல்திட்டத்தை உருவாக்கியவர்களும் இவர்களே. Pete தொடர்பான பிரமிக்கக்கூடிய பல விஷயங்களைத் ‘தயாரிப்பாளர்’ பக்கத்தில் அறியலாம். இது போன்ற விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இப்பக்கத்தைச் சென்று காணுங்கள்.

 8. பொருளகத்தைக் கொள்ளையடித்தா இந்த நிகழ்ச்சியை நடத்தினீர்கள்?

  வைமெக்ஸ் இணையத்தள அணுகல் நிறுவனமான பி1 வின் முழு ஆதரவில் 15Malaysia தயாரிக்கப்பட்டது. தயவுசெய்து அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்களின் சுயசரிதையை ‘Producers’ பக்கத்தில் கண்டுகளியுங்கள். 15Malaysiaவை உருவாக்கும் சிந்தனை, பணம் கொடுத்து வாங்கப்பட்டதா அல்லது Pete Teo பலருடன் சேர்ந்திருந்தாரா. இரண்டும் இருக்கலாம்.

 9. ஏன் 15?

  இது ஓர் அழகான எண் என்ற காரணத்தைத் தவிர வேறு காரணம் ஏதுமில்லை. 17.43… போன்ற எண்களைப் போல் அல்ல…

  உண்மையில், மலேசியாவில் எங்கள் செயல்திட்டத்திற்குப் பொருத்தமான நூற்றுக்கணக்கான படத் தயாரிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், ஒரே சமயத்தில் எங்களால் 15 படங்களுக்கு மேல் கையாள இயலவில்லை. இதைத் தவிர்த்து, தேர்ந்தெடுக்கப்படாத தங்களின் தரமான படைப்புகள் அனைத்தையும் இந்த அகப்பக்கத்தில் ‘107Malaysia’ பகுதியைச் சென்று காணவும்.

 10. எத்தனை பேர் இச்செயல்திட்டத்தில் பங்கெடுத்தனர்?

  தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் இச்செயல்திட்டத்தில் ஒரு பகுதியினரே ஆவர். பதிப்பாசிரியர்கள், ஒலிப்பதிவாளர்கள், எழுத்து வடிவமைப்பாளர்கள், இணையத்தள வடிவமைப்பாளர்கள், குறிமுறை எண்ணிக்கையாளர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள், மற்றும் பொறியியல் வல்லுனர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரடியாக இந்த 15Malaysia செயல்திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். மூன்றே மாதத்தில் இந்தச் செயல்திட்டம் பூர்த்தியாகியது. Pete Teo சுறுசுறுப்பாகக் காலையிலேயே வேலைகளைத் தொடங்கியிருந்தால் இன்னும் விரைவாக முடித்திருக்கலாம்.

 11. நான் எப்படி இந்தக் குறும்படங்களைப் பார்ப்பது?

  படத்தைப் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் பார்க்க விரும்பும் படத்தைப் ‘படம்’ எனும் பகுதியில் சொடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த படம் வெளியீடு கண்டிருந்தால், உங்கள் திரையில் இப்படத்தைக் காணலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தின் தயாரிப்பாளரின் சுயசரிதையையும் திரைக்காப்பு வழி ‘படத் தயாரிப்பு’ முறைகளையும் காணலாம்.

 12. படத்தை எவ்வாறு தரவிறக்கம் செய்வது?

  இந்த அகப்பக்கத்தில் திரைக்காப்பு பகுதியில், நாங்கள் உங்களுக்கு இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் சேவையை வழங்கியுள்ளோம். M4V எனும் வரையறையை நீங்கள் தரவிறக்கம் செய்வதுடன் எண்முறை தொலைக்காட்சியையும் பட்டியலிடலாம். நீங்கள் விரும்பும் எண்முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, இணைப்பைச் சொடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்முறை மற்றும் இணையத்தள இணைப்பின் வேகத்தைப் பொருத்தே உங்களின் தரவிறக்க நேரமும் அடங்கும். தரவிறக்கத்தின் நேரம் ஐந்து முதல் பத்து நிமிட வரையிலும் நீடிக்கும். தயவுசெய்து பொருமையாகக் காத்திருங்கள்.

 13. தரவிறக்கத்தில் தோல்வி அல்லது காலத்தாமதம்!

  உங்களுக்குத் தரம் நிறைந்த தரவிறக்கத்தைக் கொடுக்கும் நோக்கில், எங்களின் படத் தொகுப்புகள் யாவும் பெரிய அளவில் அமைந்திருக்கும். மலேசியாவின் இணையத் தொடர்பு மிகவும் தாமதமாகவும் எவ்வேளையிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது எனவும், தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனவும் காட்டுகிறது. ஆகவே, ‘மேனேஜர்’ தரவிறக்கத்தின் மூலம் படங்களைத் தரவிறக்கம் செய்வது இதற்கு ஒரு நல்ல முடிவாக அமையும். இதன் மூலம் நீங்கள் விரைவாகவும் இணையச் சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதிலிருந்தும் விடுபடலாம். Windows பயனருக்கு Free Download Manager செயலியையும் Mac பயனருக்கு iGetter செயலியையும் பயன்படுத்துமாறு நாங்கள் முன்மொழிகின்றோம்.

 14. என்னால் M4V செயலியை இயக்க முடியவில்லை!

  எங்களின் படத் தொகுப்புகள் அனைத்தும் M4V செயலியில் பதிவு செய்துள்ளோம். தரம் நிறைந்த M4V செயலி திட்டத்தை Apple நிறுவனம் தயாரித்துள்ளது. படத் தொகுப்புகளைப் பார்ப்பதற்கு, Windows பயனர் Quicktime Player அல்லது iTunes செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒரு சில Windows கணினியில், ‘M4V’ செயலியை ‘MP4′ செயலியாக மாற்றுவதன் மூலம் இந்தப் படத் தொகுப்புகளை நீங்கள் காணலாம். Quicktime மூலம் எங்களின் படத் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து படங்களைப் பார்க்குமாறு முன்மொழிகின்றோம்.

 15. நான் எப்படி உதவுவது?

  Facebook மற்றும் Twitter சமுதாயத்தினர் குழுவில் இணைவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம். அதிகமான பேரை இந்த அகப்பக்கத்தை நாடச் செய்து படங்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம். எங்கள் படைப்புகளைத் தரவிறக்கம் செய்வதன் மூலமாகவோ எங்களின் பட அறிக்கைகள் மற்றும் மேசைபின்னணிகளைத் தங்கள் கணினியில் திரைகாப்பாகப் பயன்படுவதன் மூலமாகவோ எங்களுக்கு ஆதரவு கொடுக்கலாம். மேலும், இந்த அகப்பக்கத்தில் உங்களுக்குத் திரைக்காப்பு துணைப் பாகங்களை வழங்குகிறோம். வெகுமதிகளும் இப்பக்கத்தில் வழங்கப்படும். வேறு வழிகளில் நீங்கள் உதவ முடியுமென்றால், எங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தெரியபடுத்துங்கள்! எங்களின் மின்னஞ்சலின் முகவரி ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் காணப்படும்.

 16. நான் எப்படி 15MALAYSIAவில் பங்கெடுக்க முடியும்?

  15Malaysia செயல்திட்டத்தில் இணைவதற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். உங்களுடைய குறும்படங்களை எங்கள் அகப்பக்கத்தில் ஒலி/ஒளி பரப்புவதன் மூலம் நீங்களும் எங்களுடன் இணையலாம். நீங்கள் எவ்வித கருவிகளைப் பயன்படுத்தி படங்களைத் தயாரித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். 35மிமீ அளவிலான படச் சுருளாகவோ கைப்பேசியாகவோ இருக்கலாம். உங்கள் சேவைக்கு RUUMZ பகுதியில் காணப்படும் நல்உள்ளங்கள் பரிசுகள் வழங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அகப்பக்கத்தில் ‘107Malaysia’ பகுதியில் இதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டிருக்கும். இப்போழுது சென்று காணுங்கள்!

 17. ’15Malaysia’ படத்தயாரிப்பாளர்களை எப்படிச் சந்திப்பது?

  தயவு செய்து எங்கள் Facebook பக்கத்திற்குச் சென்று, எதிர்கால நிகழ்வுகளான கருத்தரங்குகள், பட்டறைகள், நேர்முக சந்திப்புகள், மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்களுடான சந்திப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.Creative Commons License

Sponsored by P1

Cupid Blogger