Kamal Sabran

Kamal Sabran

Kamal Sabran ஒரு கலைஞர், வடிவமைப்பாளர், ஆராய்ச்சியாளர் ஆவார். இவரின் படைப்புகளில் கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வேலைபாடுகள் கலந்திருக்கும். Kamal Sabran கைவண்ணத்தில் உருவாகிய ஓவியங்கள், கலை பதிப்புகள், குறும்படங்கள் மற்றும் ஒலி கலைகள் அனைத்தும் சிங்கபூரிலும் இந்தோனேசியாவிலும் நடைபெற்ற கலைவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. Kamal Sabran எப்பொழுதும், புதிய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, சிறந்த கலைஞர்கள், புகைப்பட நிருபர்கள், வடிவமைப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோர் கூட்டணியில் சிறந்த படைப்புகளைத் தந்து வந்துள்ளார். இவர் தனது படைப்புகளில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் இடத்தையும் நேரத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்தி வேலைகளைச் செவ்வன முடிப்பதால் மலேசியத் தேசிய கலைக்கூடம் இவருக்குச் சிறந்த புதிய ஊடகக் கலைஞர் விருதை 2004ஆம் ஆண்டு வழங்கியது. தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு, ஆசியாவின் சிறந்த புதிய ஊடகக் கலைஞர் விருது இந்தோனேசியா தேசியக் கலைக்ககூடத்தில் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், 2005ஆம் ஆண்டு மலேசியத் தேசிய வின்னுலக நிறுவனத்தின் ஆஸ்தான கலைஞராக இவர் நியமிக்கப்பட்டார். ஊடகக் கலைத்துறையைத் தவிர்த்து, விருதுகளைப் பெற்ற படைப்புகளுக்கும் Kamal Sabran இசை வீடியோகளைத் தயாரித்து தந்துள்ளார். அவற்றுள் Pete Teo மற்றும் Alleycats கலைஞர்களின் படைப்புகளும் அடங்கும். தற்பொழுது, Kamal Sabran ஈப்போவில் வசிக்கிறார்.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!