பட்டியல் தயாரிப்பாளர்

Liew Seng Tat

Liew Seng Tat

Liew Seng Tat ஜிஞ்ஜாங்கில் பிறந்தவர். இவர் தலைச்சிறந்த இளம் பட இயக்குனர் ஆவார். இவர் பல்லூடகப் பல்கலைக்கழகத்தில் 3டி அனிமேஷன் துறையில் பட்டம் பெற்றதோடு நுண்மையான நகைச்சுவை குரலில் பேசும் திறனும் உள்ளவர். 2003அம் ஆண்டு, இவர் தயாரித்த முதல் நேரடி ஆக்க்ஷன் குறும்படமான ‘பிரெட் ஸ்கின் வித் ஸ்ராபெரி ஜாம்’ முதன்மை விருதைப் பெற்றது. அதே விருதை Liew Seng Tat தயாரித்த இரண்டாவது குறும்படமான ‘ப்ளவர் இன் மை பாக்கேட்’ புசான், ராட்டர்டாம், பிரிபாக் மற்றும் பிசாரோ திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றது. இவரின் படைப்புகள் பெரும்பாலும் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் பல ஆழமான கருத்துகளை உள்ளடக்கிய மாறுபட்ட சிந்தனை காவியங்களாக இருக்கும். Liew Seng Tat நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இன்று வரை Liew Seng Tat தனது இரண்டாவது முழுநீளப் படமான ‘இன் வாட் சிட்டி டஸ் இட் லீப்?’ எனும் கதையைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் திரைக்கதை, சினி பெளண்டேஷன் கேன்ஸ் ரேசிடண்சியில் இவர் தங்கியிருந்த வேளையில் உருவாக்கப்பட்டது.

மேற்கொண்டு

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Linus Chung

Linus Chung

திரைப்பட பிரியரான Linus Chung, சிறுவயதிலிருந்தே தனது குடும்பத்தினரை விலை குறைந்த புகைப்பட கருவியின் மூலம் படமெடுத்து அதனை வீடியோ கருவியில் பதிப்பு செய்துள்ளார். இப்பொழுது இவர், தனது வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்குத் தனது சிறுவயது கனவான தயாரித்தல் மற்றும் இயக்குதல் திறனைப் பயன்படுத்தி தொலைக்காட்சி விளம்பரங்களையும் பெரிய நிறுவனகளுக்குப் பட தொகுப்புகளையும் தயாரித்து வருகிறார். அண்மையில், நோக்கியா நிறுவனத்தின் முழு ஆதரவில், ‘அ நோட் ஒவ் லவ்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அளவான வெளியீட்டைக் கொண்டிருந்தாலும் மலேசியத் திரைப்படத்துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘மாதர்’ என்ற டாக்குமந்திரி படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இவரின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாக ‘டெமொல்ஷன் ப்ரோக்’ எனும் தனிப்பட்ட அனிமேட்தட் குறும்படம் கருதப்படுகிறது. இப்படம் உலகளவில் தலா 11 அனைத்துலகத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து, படத் தயாரிப்பு மற்றும் சினிமா சார்ந்த விஷயங்களை, ‘விடா’, ‘நியுமான்’, ‘சினிமா அன்லைன்’ மற்றும் ‘டெல்’ ஆகிய இதழ்களுக்கு எழுதியும் வருகிறார். Linus Chung ஒரு பயிற்சி பெற்ற சிற்பி மற்றும் ஓவியரும் ஆவார்.

மேற்கொண்டு

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Amir Muhammad

Amir Muhammad

Amir Muhammad 2000ஆம் ஆண்டு மலேசியாவின் முதல் டிஜித்தல் படத்தை எழுதி இயக்கியவர். இதன் மூலம் நாட்டின் புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்த இவர் எதிர்மறையான கருத்துகளை முன் வைத்து தனித்தியங்கினார். மற்ற இயக்குனர்களிலிருந்து தனித்துவம் வாய்ந்த இவரின் கதைகள் அனைத்தும் மலேசியாவில் நடக்கக்கூடிய சமுதாய மற்றும் அரசியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை. இவரின் படைப்புகள் நிறைய விருதுகளைப் பெற்றுள்ளன. அவற்றுள் சண்டேண்ஸ் மற்றும் பெர்லீன் திரைப்பட விழாக்கள் குறிப்பிடத்தக்கது. ‘அப்ப காபார் ஓராங் கம்போங்’ மற்றும் ‘த லாஸ்ட் கம்யுனிஸ்ட்’ எனும் திரைப்படங்கள் மலேசியாவில் திரையிட தடைசெய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிசாரோ திரைப்பட விழாவில் Amir Muhammad இயக்கிய திரைக்காவியங்கள் தொகுப்பாகத் திரையிடப்பட்டன. மேலும், இவர், ‘மலேமேல்’ மற்றும் ‘போப் த எட்ஜ்’ ஆகிய நாளிதழ்களில் சிறப்பு எழுத்தாளராகப் பல அரசியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அண்மையில் இவர், ‘மாத்தாரி புக்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார். அண்மையில், அரசியல் வாக்குறுதிகள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ‘மலேசியன் போலிதிக்கன்ஸ் சே த டார்னெஸ்ட் திங்ஸ்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய தொகுப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

மேற்கொண்ட

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Yasmin Ahmad

Yasmin Ahmad

Yasmin Ahmad, கடந்த ஜுலை 25, 2009ஆம் ஆண்டு தனது 51ஆவது வயதில் காலமானார்.

Yasmin அனைத்துலகத் தரம் வாய்ந்த திரைப்பட இயக்குனர். இவரின் தொலைக்காட்சி விளம்பரத் தகவல்கள் அனைத்தும் உலகளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. சான் பிரான்சிஸ்கோ, பெர்லீன், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் புசான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களில் இவரின் கைவண்ணத்தில் உருவாகிய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையீடும் கண்டுள்ளன. 2006ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் இவரைக் கெளரவித்து, இவரின் படங்கள் சிறப்புத் தொகுப்பாகத் திரையிடப்பட்டன. 2004ஆம் ஆண்டு திரைக்கண்ட இவரின் ‘செபிட்’ திரைப்படம் மலேசியாவில் ஒரு புகழ்பெற்ற காவியமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத காதல் சிந்தனையைக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவரின் திரைக்கதைகள் இனம் மற்றும் மதத்திற்கும் அப்பால்பட்ட மற்றும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டவை. Yasmin Ahmad தயாரித்த திரைக்கதைகள் எதிர்மறையான சிந்தனையையும் தூண்டுதலையையும் ஏற்படுத்தக்கூடிய கதைகளாக இருந்தாலும் கதை அம்சம் மிக அழகாகவும் இயல்பாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இவரின் மரணம் மலேசியா கலை உலகம் ஒரு தலைச்சிறந்த சிந்தனையாளரை இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். மலேசியத் திரைப்பட உலகில் Yasmin எல்லாத் தலைமுறையிலும் ஒரு முக்கிய இடத்தை வகித்து வந்துள்ளார். மில்லியன் கணக்கான மலேசியர்களுக்கு இவரின் இறப்பு பெறும் இழப்பைத் தந்துள்ளது.

‘சாக்லட்’ இவரின் இறுதி படமாகும்.

மேற்கொண்டு

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!

Ho Yuhang

Ho Yuhang

Ho Yuhang பெட்டாலிங் ஜெயாவில் பிறந்து வளர்ந்தவர். சினிமா தயாரிப்புத் துறையில் ஈடுபடுவதற்கு முன் இவர், அயோவா மாநிலப் பல்கலைக்கழகத்தில் பொறியிலாளர் துறையில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இவர் தயாரித்த ‘மின்’ என்ற முழுத் தொடர்ப்படம், நேன்ஸ் பிரான்ஸில் நடைபெற்ற கண்டங்களுக்கான ‘டேஸ் த்திரி’ திரைப்பட விழாவில் சிறப்பு நீதிபதிக் குழுவால் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஆசியாவிலேயே, சிறந்த இளம் திரைப்பட படைப்பாளியாக இவர் கண்டறியப்பட்டார். மேலும், இவர் தயாரித்த படங்கள் பல பரிசுகளையும் தட்டிச் சென்றுள்ளன. அவற்றுள் ‘நெட்பேக்’ விருது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த குறும்படத்திற்கான ‘டைகர்’ விருதும் ராட்டர்டாம் திரைப்படவிழாவில் கிடைத்துள்ளது. இவரின் புகழ்பெற்ற 3ஆவது படைப்பான ‘ரேன் டாக்ஸ்’ 2006ஆம் ஆண்டு நடைபெற்ற வெனிஸ் அனைத்துலகத் திரைப்பட விழாவில் முன்மொழியப்பட்டது. இதுவே, ஒரு மலேசியரின் கைவண்ணம் முதல் முறையாக அனைத்துலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், ரோலேக்ஸ் நிறுவனம் நடத்திய ‘மார்த்தின் சிரோசி’ அறவாரியத்தில் Ho Yuhang சிறப்பு குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நான்காவது படமான ‘எட் த என் ஒவ் டேபிரேக்’ 2009ஆம் ஆண்டு இறுதியில் வெளியீடு காணவுள்ளது.

More

பங்கிடுதல்

வார்த்தையை விரிவாக்க உதவுங்கள்!Creative Commons License

Sponsored by P1

Cupid Blogger